05.04.2022 அன்று வள்ளியூர் மின்வாரிய கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் - மின்தடை....

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வள்ளியூர்
விநியோக
செயற்பொறியாளர் வளன் அரசு
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
வருகின்ற 05.04.2022 செவ்வாய்கிழமை அன்று வள்ளியூர் மின்வாரிய
கோட்டத்திற்குட்பட்ட 110/33-11 KV கோட்டைக்கருங்குளம் 110/11 KV மற்றும் 33/11 KV
திசையன்விளை, 110/33-11KV மற்றும் 33/11KV வள்ளியூர் துணை மின்நிலையங்களில்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று 09.00 மணி முதல்
பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும் மின்விநியோகத்திற்கு
இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையினை பராமரிக்க
ஒத்துழைப்பு தரும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கோட்டைகருங்குளம், குமாரபுரம் வாழைத்தோட்டம்
சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலாபுரம்,
திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, விஜயநாராயணம்,
குட்டம் ஆனைகுடி முதுமொத்தான்மொழி மற்றும் வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி
சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர். ஏர்வாடி, திருக்குறுங்குடி, மற்றும் மாவடி.