விரைந்து நடவடிக்கை எடுத்த உதவி ஆட்சியர்... பாராட்டும் பொதுமக்கள்...

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆரிப் ஹுசைன் ஊரடங்கு உத்தரவு காரணமாக நெல்லையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில் உணவின்றி தவித்து வருகிறார் என்று www.nellaijustnow.com ல் செய்தி வெளியானது. . இது குறித்து தகவல் கிடைத்ததும் நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பொறுப்பு அலுவலர் சிவகுரு பிரபாகரன் இ. ஆ. ப விரைந்து நடவடிக்கை எடுத்தது பாதிக்கப்பட்ட குஜராத் இளைஞருக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் அந்த இளைஞருக்கு உணவு கிடைத்ததை உறுதி செய்தார்.
அவரது தன்னலமற்ற சேவையை www.nellaijustnow.com தனது அணைத்து வாசகர்கள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பாராட்டுவதோடு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது...