top of page

வங்கிகளின் மேலாளர்களுடன் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை  மேம்படுத்துவது  குறித்து ஆலோசனை

இன்று(25-02-2020) திருநெல்வேலி மாநகரில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளின் மேலாளர்களுடன் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எனது உரையின் முக்கிய அம்சம்:- 🎯வங்கிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநகர காவலரதுறையினர் அளிக்கும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் 🎯 வங்கிகளில் இரவுக் காவலர் நியமித்தல், கூடுதல் சிசிடிவி பொருத்துதல் , அலாரம் பொருத்துதல் , கூடுதல் விளக்குகள் மற்றம் கிரில் கதவுகளை பொருத்த வேண்டும். 🎯 உங்கள் பகுதி காவல்துறையினர் நேரடியாக வங்கியை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்குவர். 🎯வங்கிகள் தங்கள் வங்கி அமைந்துள்ள அந்த சாலையின் இருபுறமும் 500 மீட்டர் தொலைவிற்கு CCTV பொருத்துவது கூடுதல் பலனளிக்கும். 🎯 மாநகர காவல்துறையின் முயற்சிக்கு வங்கிகள் உதவிபுரிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் &ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்

5 views0 comments
bottom of page