top of page

ரோஸ்மேரி பெண்கள் கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு *காவலன் SOS* செயலி குறித்த விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்ட *காவல் கண்காணிப்பாளர்* அவர்களின் உத்தரவுபடி முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோஸ்மேரி பெண்கள் கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு *காவலன் SOS* செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி *சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதீப் இ.கா.ப* அவர்கள் தலைமையில், *ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி* அவர்கள் மற்றும் *உதவி ஆய்வாளர் திரு. சுந்தர்* ஆகியோர் மாணவிகளுக்கு காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றியும், முக்கியத்துவம் குறித்தும் ஆலோசனை கூறியும்,மேலும் ஸ்மார்ட்போனில் காவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டு மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை*

4 views0 comments
bottom of page