மேலப்பாளையம் உழவர் சந்தையில் பொதுமக்கள் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று காய்கறிகள் வாங்க ஏற்பாடு.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள உழவர் சந்தை மூடப்பட்டதால் மாநகராட்சி திருமண மண்டபம் மற்றும் ரவுண்டாணா பகுதியில் பாதி பாதி கடைகளாக பிரிக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை நடைபெறுகிறது. நேற்று ஊரடங்கின் 2ம் நாளில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூட்டமாக நின்று பாதுகாப்பற்றமுறையில் காய்கறி வாங்குவதாக நமது www.nellaijustnow.com ல் செய்தி வெளியானது. அதையடுத்து இன்று 3ம் நாளில் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு வரிசையில் நின்று காய்கறிகள் வாங்கிச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை, கண்காணிக்க மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அதிகஅளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.