மானூர் நாற்றுப் பண்ணையில் இயற்கை விவசாயி களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு
திருநெல்வேலி இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு மானூர் சுசீ நாற்றுப் பண்ணையில் நடந்தது இந்த பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா கலந்து கொண்டார். நாமக்கல் வளையப்பட்டி பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி விஞ்ஞானி தக்காளி ராமன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விளக்கங்கள் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊட்டி திருவண்ணாமலை திருச்சி பெங்களூர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் தக்காளி சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் மற்றும் விதை முதல் விற்பனை வரை உள்ள பயிற்சிகள் அளிக்கப்பட்டது.


