top of page

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் கொரோனா‌ வைரஸ் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு




முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் கொரோனா‌ வைரஸ் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ் சிங் இ.கா.ப அவர்கள்.


திருநெல்வேலி மாவட்ட *காவல் கண்காணிப்பாளர்* அவர்களின் உத்தரவுபடி *சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பிரதீப் இ.கா.ப* அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் *பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஸ் சிங் இ.கா.ப* அவர்கள் கலந்து கொண்டு,


*பொதுமக்களிடம் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வதை சிறிது காலம் தவிர்க்க வேண்டும், லேசான காய்ச்சல், தும்மல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும், வீட்டில் உள்ள குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம், வீட்டில் உள்ள அனைவரும் நிலவேம்பு கசாயம் அருந்துங்கள், கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், தேவையற்ற முறையில் அடுத்தவரிடம் கை கொடுப்பதை தவிர்த்து கொண்டு, நமது பாரம்பரிய முறையான இரண்டு கைகளால் வணக்கம் தெரிவிக்கும் படி* விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


*பொதுமக்களை அழைத்து கைகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.*


*இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. சுந்தர் அவர்கள் மற்றும் திரு.வேல்முருகன் அவர்கள் மற்றும் முன்னிர்பள்ளம் காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.*

6 views0 comments
bottom of page