முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, தென் மண்டல ஐ.ஜி ஆய்வு...

*தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, தென் மண்டல ஐ.ஜி திரு. சண்முக ராஜேஸ்வரன் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார்.* *❇வருகிற 22.02.2020 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பா. சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்கள்.* *❇இந்த மணி மண்டபத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்கிறார். அந்த விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான கருவியை முதல்வர் காணொளி மூலம் தொடங்கி வைத்து, மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.* *❇இந்நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு. சண்முக ராஜேஸ்வரன் இ.கா.ப, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு. பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப ஆகியோர் முதல்வர் பயணத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.* *❇பின்னர் அவரகள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு, அதன் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார், தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.*