top of page

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தசிறப்பு விழிப்புணர்வு முகாம்...

இந்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள்;; குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்; குத்துக்கல்வலசையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் தலைமைதாங்கி ஊரக வளர்ச்சி துறை முலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பாலகணேஷ்; சுகாதார துறை மூலம் தாய், சேய் மற்றும் வளரிளம்பெண்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவசேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினார். தமிழ்நாடு கிராம வங்கியின் நிதிசார் கல்வி ஆலோசகர் திரு.மகாலிங்கம் பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் குறித்து உரையாற்றினார். சமூக நல துறை ஊர் நல அலுவலர் ஆரோக்கிய மேரி சமூகநல துறைமூலம் மகளிர்க்கு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து உரையாற்றினார். ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் அஞ்சுகம் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் தாய், சேய் மற்றும் வளரிளம்பெண்களுக்கு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் சுகாதாரப்பணி துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் இரகுபதி, வேளாண்மை அலுவலர் சரவணன், நடமாடும் மருத்துவமனை மருத்துவ அலுவலர் முகமது இப்ராஹிம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு, சமூகநல துறை ஒருங்கிணைந்த சேவை மையம் ஆலோசகர் ராஜம்மாள் மற்றும் மகிளா சத்ய கேந்திரா ஆலோசகர் தங்கமாரி கலந்துகொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து உரையாற்றினர். நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு மகளிர், பொதுமக்கள், செயின்ட் மேரீஸ் ஐ.டி.ஐ. மாணவர்கள் மற்றும் செயின்ட் மேரீஸ் நர்சிங் பயிற்சி மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக செயின்ட் மேரீஸ் ஐ.டி.ஐ. மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கொடி அசைத்து துவங்கி வைத்தார். ஆரோக்கிய குழந்தை போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக திருநெல்வேலி மக்கள் தொடர்பு கள அலுவலக கள விளம்பர அலுவலர் செய்திருந்தார்.

21 views0 comments
bottom of page