பெண்ணின்றி அமையாது உலகு .மார்ச்-8உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...

“தற்காத்து தற்கொண்டாற் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்ற குறளுக்கு ஏற்ப தன்னையும் தன் கணவனையும் காத்து புகழையும் காக்கும் பெண்ணை காக்கும் பணியினை நெல்லை மாநகர காவல்துறை மிகச் சிறப்பாக கடந்த ஓராண்டில் மேற் கொண்டுள்ளது. 🎯 பெண்களை பாதுகாக்கும் காவலன் செயலியை நெல்லையில் பிரபலப்படுத்தும் வகையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நூற்றுக்கும் மேலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 🎯பெண்களுக்கு காவலன் செயலி எளிதில் சென்று சேர ஏதுவாக வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள் , கோவில்கள் , சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 🎯 காவலன் செயலிக்காக பெண்கள் மட்டுமே பங்கேற்ற “வாக்கத்தான்” நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 🎯 கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் “சைபர் குற்றங்கள் “ தொடர்பான கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 🎯 அரசு ஆதிதிராவிட விடுதியில் வேலைவாய்ப்பு துறை மூலமாக மேற்படிப்பு மற்றும் போட்டி தேர்வு குறித்து வகுப்பு நடத்தப்பட்டது. 🎯 மகளிர் எளிதாக அரசு சார் கடன் பெற ஏதுவாக வங்கி விபரக் கையேடு மாவட்ட நிர்வாகம் மூலம் வெளியிட உதவியாக இருந்தது . 🎯பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் விரைவான குற்றப்பத்திரிக்கை பதிவு செய்து விரைவான தண்டனை பெற பாடுபடுவோம். வரும் ஆண்டிலும் பெண்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு மாநகர காவல்துறையின் பணிகளை தொடர உறுதி பூண்டுள்ளோம். பாட்டி, தாய், சகோதரி, தோழி, மனைவி , மகள், பேத்தி ,என நம் வாழ்வு பெண்களால் மட்டுமே நிறைவாகும். பெண்மையை போற்றுவோம். “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” #Internationalwomensday #womensday #Tirnelveli என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்