பத்து நாள் உற்சவம்நெல்லை புத்தக திருவிழா..,
அன்புள்ள தமிழ் மக்களுக்கு

4வது நெல்லை புத்தக திருவிழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தள்ளது. பிப்ரவரி 01 முதல் 10 வரை நடைபெற்ற இத்திருவிழா பல வகைகளில் மனதிற்கு நெருக்கமாக அமைந்தது. 🎯 புத்தக திருவழா நடத்துவது என முடிவானவுடன் அமைக்கப்பட்ட குழுவில் நீங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என வலியுறத்திய மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS அவர்களுக்கு நன்றி. 🎯புத்தக திருவிழாவின் பந்தல் அமைப்பு தொடங்குவது முதல் ஆலோசித்த உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் IAS மற்றும் துணை ஆட்சியர் அனிதா ஆகியோர் இந்நிகழ்வின் மையமாக திகழ்ந்தனர். 🎯நிகழ்ச்சியை பிரபலப்படுத்த தினசரி ஒரு நிகழ்வு . ஒரு நாள் சைக்கிள் பேரணியை துவக்கி வைக்கவும் சென்றேன் . 🎯 நெல்லையின் தொன்மையை விளக்கும் அழைப்பிதழ் , 240 மணி நேர வாசிப்பு, 17 சாகித்திய அகாடமி விருதாளர்கள் கவரவிப்பு, என சாதனைகள் பிரமாதம். மிகச்சிறப்பாக ஒரு பெரிய கோடு போடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதை விட சிறப்பாக நடத்துவதன் மூலமே இதன் பெருமையை சுருக்க முடியம். 10 நாட்களில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர் . சுமார் 3 கோடிவிற்பனை நடந்துள்ளது. அது சாதனையல்ல. இங்கு விற்பனையான புத்தகங்கள் வருங்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கமே மனநிறைவு. தமிழகத்தின் அறிவுத் தலைநகராக ( Intellectual Capital of Tamilnadu) திருநெல்வேலி விளங்க வேண்டுமென்பதே பேரவா!! இத்திருவிழாவிற்காக பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. #அன்பைவிதைப்போம் #Tirunelveli #IntellectualcapitalofTamilnadu என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம் Intellectual Capital of TamilNadu.