top of page

பணி ஓய்வு பாராட்டு விழா...

சேரன்மகாதேவி மருத்துவ முதன்மை குடிமை மருத்துவர் டாக்டர் சாந்தகுமார் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு அடைந்தார் அவருக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பணி ஓய்வு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டஇணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க திருநெல்வேலி மாவட்ட செயலாளருமான மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலை வகித்த வாழ்த்திப் பேசினார்.முன்னாள் இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் முத்தையா, மேலப்பாளையம் மருத்துவ அதிகாரி மருத்துவர் ராமநாதன், செங்கோட்டை மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர் ராஜேஷ்கண்ணா, துணை இயக்குனர் குடும்ப நலம் மருத்துவர் முகைதீன் அகமது,சேரன்மகாதேவி மருத்துவமனை மருத்துவர்கள், மற்றும் திருநெல்வேலி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க மருத்துவர்கள் பலரும் வாழ்த்தி பேசினார்கள்.சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் முதன்மை குடிமை மருத்துவர் சாந்தகுமார் அவர்கள்பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.விழாவில் NHM மாவட்ட அதிகாரி மருத்துவர் கார்த்திக் அறிவுடைநம்பி,உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளைசேரன்மகாதேவி அரசு மருத்துவமனை அனைத்து மருத்துவர்களும் பணியாளர்களும் செய்திருந்தனர்

3 views0 comments
bottom of page