பசுமை தாயகம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய நெகிழி ஒழிப்பு முகாம்
பசுமை தாயகம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி நடந்த நெகிழி ஒழிப்பு முகாமில் பொதுமக்கள் நெகிழி குப்பைகளை கொடுத்து துணி பையில் அரிசியை பெற்று சென்றனர். தமிழக அரசு நெகிழி ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தி மாற்று பொருட்களை பயன்படுத்த வலியுறுத்திவரும் நிலையில் பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகின்றன. அதன் படி பகுதியாக நெகிழி குப்பைகளுக்கு அரிசி வழங்கும் முகாமினை நெல்லை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வி. மு. சத்திரம் பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தார். இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நெகிழி பைகள் , புட்டிகள் கொண்டு வந்து கொடுத்து விட்டு அரிசி துணி பையில் வாங்கி சென்றனர்.