நெல்லையில் மழை நீர் சூழ்ந்து தீவாக மாறிய சேவியர் காலனி

மேலப்பாளையம் மண்டலத்திற்க்கு உட்பட்ட சேவியர் காலனி பகுதியில் மழை நீர் சூழ்ந்து தீவாக மாறியுள்ளது. செயிண்ட் பீட்டர் சர்ச் அருகே உள்ள தெருக்கள் மற்றும் டான்போஸ்கோ பள்ளி செல்லும் தெருக்கள் ஆகிய பகுதிகளில் மழை நீர் செல்ல பாதை இல்லாமல் நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமத்துடனே இப்பகுதியை கடந்து செல்கின்றனர். மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


18 views0 comments