நெல்லையின் நேர்மை குணம்...

இன்று (28-02-2020) சட்டம் ஒழுங்கு பணி நிமித்தம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பணியிலிருந்த போது அங்கு பணியிலிருந்து உதவி ஆய்வாளர் மகேஷ் குமார் என்னை அனுகி பணியிடத்தில் ஒரு பர்ஸ் கீழே கிடந்தது என கொண்டுவந்து கொடுத்தார். அதில் ரூ 4500 பணமும் சில ATM கார்டுகளும் இருந்தது. காவல் நிலையத்திற்கு புகார் ஏதும் வந்துள்ளதா என செக் செய்து கொண்டிருந்த போது, அங்கு மிக பதட்டத்துடன் வந்த மேலகரத்தை சேர்ந்த சித்த மருத்துவர் ஈஸ்வரன் அவர்கள் தனது பர்ஸ் காணமல் போனதாகவும் கடந்த ஒரு மணி நேரமாக தான் வந்த பாதை முழுவதும் தேடி காவல்துறையிடம் புகார் அளித்தால் கண்டு பிடித்து தருவார்கள் என்பதால் இங்கு வந்ததாக கூறினார் .அவரை ஆசுவாசப்படுத்தி அவரது பொருளை அவரிடம் ஒப்படைத்தோம். தான் குருவி சேர்ப்பது போல் சேர்த்த பணம் இப்படி தொலைந்து போனதே என இறைவனை வேண்டினேன் . காவல்துறை மூலம் என் பொருளை சேர்த்துவிட்டார் என கண்ணீர் மல்க நன்றி தெரிவத்தார். காவல்துறை மேல் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உயர்த்தும் வகையில் செயல்பட்ட உதவி ஆய்வாளர் மகேஷ் குமாரை பாராட்டினேன். பர்ஸ் உபயோகப்படுத்துபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் தங்கள் முகவரி மற்றும் செல்போன் எண் எழுதிய தாளை பர்சில் வைப்பது அது தொலைந்து போகும் சமயத்தில் பலனளிக்கும். #அன்பைவிதைப்போம் #Tirunelveli #Tnpolice “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்