top of page

நெல்லையின் நேர்மை குணம் 

திருநெல்வேலி, மேலப்பாளையம் காவல் நிலையத்தில், கடந்த 06-02-2020-ம் தேதியன்று சுமார் மூன்று சவரன் எடையுள்ள தங்க செயினை, தலைமை காவலர் திரு.சந்தானம் அவர்கள் (HC 1455) என்பவர் கண்டெடுத்து, அன்றைய தினத்தில் காவல் நிலையம் வந்தவர்களில் பலரிடம் விசாரித்ததில், குலவணிகர்புரத்தை சேர்ந்த சண்முக மணிகண்டன் மற்றும் அவரது தந்தை வள்ளிக்கண்ணு ஆகிய இருவரும் பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்க்காக வந்தபோது, கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் தவறிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இன்று 10-02-2020 எனது முன்னிலையில், நகைக்கு உரியவர்களான சண்முக மணிகண்டன் மற்றும் அவரது தந்தை வள்ளிக்கண்ணு ஆகியோரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது. மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் திருமதி.எழிலரசி (பொறுப்பு) அவர்கள். மற்றும் தலைமை காவலர் திரு.சந்தானம் (HC 1455) ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது. #அன்பைவிதைப்போம் #Tirunelveli “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்

10 views0 comments
bottom of page