நெல்லையின் உறங்கா விழிகள்CCTV

திருநெல்வேலி மாநகரில் குற்றங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.அதிலும் குறிப்பாக CCTV கேமிராக்களை பொருத்த வலியுறத்தி வருகிறோம். பள்ளி , கல்லூரிகள் , வணிக நிறுவனங்கள் , வழிபாட்டுத் தலங்களான கோவில்கள் , சர்ச்சுகள், மசூதிகள், வங்கிகள் , குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களிலும் CCTV பொருத்த வலியுறுத்துகிறோம். இந்த வாரம் டவுன் விநாயகர் கோவில் தெருவில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற உண்டியல் திருட்டினை CCTV உதவியுடன் சில மணி நேரங்களில் கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்தோம். அம்மன்கள் ஆயிரம் கண்ணுடையாள் என்பார்கள் . தற்போது அது CCTV தான் என உணர்கிறேன் . CCTV பொருத்துவோம். பாதுகாப்பை உறுதி செய்வோம். “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” #CCTV #Tirunelveli #Tnpolice என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் &ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்.