நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மதுவிலக்கு போலீசார் சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு ஊர்வலம்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மதுவிலக்கு போலீசார் சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மது இல்லா சமுதாயத்தை உருவாக்கும் விதத்தில் பூரண மதுவிலக்கை உருவாக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூரண மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய பேரணியை மதுவிலக்கு டி.எஸ்.பி உதயசூரியன் தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று நீதமன்ற வளாகத்தை சென்றடைந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, ராஜதுரை, காவல்துறையினர், தன்னார்வல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

