நெல்லை மாநகரின் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு.


ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலும் , தமிழ்நாடு அளவிலும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாநகரைச் சேர்ந்த காவல் நிலையங்கள் அவற்றில் இடம் பெற ஏதுவாக அவற்றை தயார் செய்யும் வகையில் காவல் நிலையங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்க கூடிய வகையில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது . காவல் நிலையங்களின் புறத்தோற்றம் , வளாக பராமரிப்பு, வரவேற்பு பகுதி, சுத்தமான பராமரிப்பு, அறிவிப்பு பலகை, ஆவணங்களின் பராமரிப்பு, காவலர்கள் அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர காவலர் ஆணையர் நேரடியாக பார்வையிட்டு மதிப்பெண்கள் வழங்கி தேர்வு செய்தார். 2020ம்்ஆண்டுக்கான இத்தேர்வில் திருநெல்வேலி டவுன் காவல் நிலையம் ( ஆய்வாளர் ராமேஸவரி) முதலிடமும், பெருமாளபுரம் காவல்நிலையம் ( ஆய்வாளர் செழியன் ) இரண்டாம் இடமும் பெற்றது. அக்காவல் நிலையங்களின் ஆய்வாளர்களுக்கு மாநகர காவல் ஆணையர் திரு. தீபக் எம் டாமோர் IPS கேடயம் வழங்கி பாராட்டினார் . “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” #Bestpolicestation #Tirunelvelicitypolice என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்