நெல்லை புத்தகத் திருவிழாவில் ஏழாம் நாளான இன்று இசை கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நெல்லை புத்தகத் திருவிழாவில் ஏழாம் நாளான இன்று இசை கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உதவி ஆட்சியர் இப் பயிற்சியினை துவங்கி வைத்தார் காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமை வகித்தார். இப்பயிற்சியினை மாவட்ட இசை பள்ளி ஆசிரியர் பொன்னி நடத்தினார். ஏராளமான பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர் .அழகிய தமிழ் பாடல்கள் இப்பயிற்சியில் கட்டுவிக்கப்பட்டது. இந்து நடுநிலை பள்ளி ஆசிரியை லக்ஷ்மியும் அவரது மாணவர்களும் பாரதியார் பாடல்களை பாடினர். ரோஸ்மேரி மாடல் பள்ளியின் மாணவ மாணவிகளும் பாரதியார் பாடலை பாடினார். தொடர்ந்து இந்து நடுநிலை பள்ளி மாணவ மாணவிகள் பட்டிமன்றம் நிகழ்த்தினர் அதில் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை இருப்பது ஆசிரியரே என்று ஒரு குழுவும் பெற்றோரே என்று மற்றொரு குழுவும் மாணவ மாணவிகள் அழகாக வாதிட்டனர். நடுவராக மாணவி பத்மாவதி திறம்பட நடத்தினார். மேலும் இன்று பனை ஓலை கொண்டு அழகிய பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியும் நடைபெற்றது அப்பயிற்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்




