நெல்லை நேர்மையின் அடையாளம் சேதுராஜா.
திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த சேதுராஜா நேற்று (06-02-2020) சமாதானபுரத்தில் உள்ள ATMல் பணம் எடுக்க சென்ற போது அந்த இயந்திரத்தில் ரூ5000/- பணமும் ரசீதும் இருந்துள்ளது. உடனடியாக எனது அலுவலகத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொண்டார் கொண்டார். ATMல் இருந்த ரசீதை அடிப்படையாக கொண்டு விசாரித்து அந்த பணத்திற்குரிய திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஆசிரியர் பெருமாளுக்கு சொந்தமானது என கண்டறிந்து சேதுராஜா மூலமாக தரப்பட்டது . நெல்லை நேர்மையின் அடையாளமாக விளங்கிய சேதுராஜாவுக்கு நெல்லை மாநகர காவல் துறையின் சார்பாக பாராட்டு தெரிவித்து சிறு வெகுமதி வழங்கப்பட்டது . “ நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” #Tirunelveli #Tnpolice #Nellaihonesty என்றும் அன்புடன் ச. சரவணன் காவலர் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்

