நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் விதிமுறையை மீறிய டீக்கடைக்கு சீல்... மாநகராட்சி அதிரடி நடவடிக்கை ..
நெல்லை மாநகராட்சி மைலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பரிமளா தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் அதிகாலை முதல் ஓய்வின்றி தொடர்சியாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தெற்கு புறவழிச்சாலையில் விதிமுறைகளை மீறி திறந்துவைக்கப்பட்டிருந்த ருசி டீக்கடையை மூடி சீல் வைத்தனர்..



