நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெண்கள் மேனிலை பள்ளிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் CCTV
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெண்கள் மேனிலை பள்ளிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வியினை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் துவக்கி வைத்தார் திருநெல்வேலி மாநகர பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊருடையார்புரம், தச்சநல்லூர், கரையிருப்பு மற்றும் மீனாட்சிபுரம் பெண்கள் மேனிலை பள்ளி ஆகிய இடங்களுக்கு 9 சி.சி.டி.வி காமிரா மற்றும் மாணிட்டர் ஆகியவற்றை இலவசமாக பொருத்தி கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சி.சி.டி.வி காமிராவின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சதீஸ்குமார், விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜகோபால் மாவட்ட மாணவரணி தலைவர் ஜெயராம், மாவட்ட பொருளாளர் ராசிக் , மாநகர மாணவரணி தலைவர் சோனு, நகர மாணவரணி தலைவர் ராஜா, பாளை மாணவரணி பிளசன், கிழக்கு பகுதி மாணவரணி சுந்தர்ராஜா, மற்றும் பிகில் திரைப்பட விநியோகஸ்தர் லயன் மணிகண்டன், பள்ளி தலைமை ஆசிரியர் மெபல் ராணி மற்றும் திரளான ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்