நெல்லை எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட செயற்குழு கூட்டம்...
எஸ்டிபிஐ கட்சி ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட செயற்குழு கூட்டம் 29/11/19 மாலை மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பீர் மஸ்தான் தலைமை தாங்கினார் எஸ்டிபிஐ கட்சி மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் ஜெய்லானி வரவேற்புரை ஆற்றினார் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி சேவை அரசியல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் ஆம்புலன்ஸ் மாவட்ட குழு உறுப்பினர் பேட்டை தமீம் ஒருவருட சேவைகளின் அறிக்கை வாசித்தார் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் வரை 450 நோயாளிகள் பயன் பெற்றதாக சுட்டி காட்டினார் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1,மழைகாலங்களில் அதிகமான மக்கள் நோய்யுற்றுள்ளனர் பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் கூடுதல் மருத்துவர்கள் ,செவிலியர்களை பணியமர்த்தப்பட வேண்டும் 2,டெங்கு மற்றும் வைரஸ் காச்சலை தடுக்க நெல்லை மாநகர் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் வார்டு வாரியாக நடத்தப்பட வேண்டும் நடத்தப்படும் முகாம்கள் குறித்து பொதுமக்களின் கவனத்திற்கு செல்லும் வகையில் முன் அறிவிப்பு செய்யப்பட வேண்டும் 3,சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் , கொசுக்கள் உற்பத்தியை தடுக்க கிருமி நாசினி தினமும் தெளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 4,பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி உள்ளதா என கண்டறிப்பட்டு முழு சுகாதாரம் பேண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 5,பாளை அரசு மருத்துவ மனைகளில் தன்னார்வர்கள் இரத்தானம் வழங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் 6,தன்னார்வ ரத்த கொடையாளர்களை அழைக்கழிப்படுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 7,பேட்டை செக்கடி அருகில் தொடர் விபத்து தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் 8,சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை மாநகராட்சி கையப்படுத்துவது மட்டுமின்றி கால்நடை கழுத்தில் சிகப்பு நிற அபாய எச்சரிக்கை பட்டை அணிய ஏற்பாடு செய்யவேண்டும் 9,டவுன் நயினார் குளம் சாலை போர் காள அடிப்படையில் சீரமைப்பு செய்யப்பட வேண்டும் 10,அதிகம் விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்க வேண்டும் புதிய கடைகளுக்கு அனுமதி தடைவிதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் , ஆம்புலன்ஸ் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பி.எம்.கனி கலந்து கொண்டனர் இறுதியாக பர்கிட் ஜுபைர் நன்றி உரை ஆற்றினார்
