நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கண்காட்சி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் திருநெல்வேலி ஓவிய ஆசிரியர்கள் இயக்கமும் இணைந்து மகாத்மா காந்தியின் உருவப் படங்கள் கொண்ட கண்காட்சி மற்றும் 10 கிலோ கல் உப்பு கொண்டு மகாத்மா காந்தியின் உருவம் கொண்ட கண்காட்சியினை காவல் உதவி ஆணையாளர் சதீஷ் குமார் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். காப்பாட்சியர சிவ. சத்திய வள்ளி தலைமை ஏற்று நிகழ்வை நடத்தினார் அதனை தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியம் மற்றும் கலை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது நெல்லை அருங்காட்சியகத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புகைப்பட போட்டியின் வெற்றியாளர்கள் முதல்பரிசு அரவிந்த் குமார், இரண்டாம் பரிசு சண்முகவேல் , மூன்றாம் பரிசு கணேஷ் ஆகியோருக்கும் மதன் கலைக்கூடம் மதன் சுந்தர் வழங்கிய பத்து நபர்களுக்கு தலா ரூபாய் 500 ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. சத்யசாய்பாபா மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் அருங்காட்சியக வளாகத்தில் தூய்மைப் படுத்தினர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்திரபாபு மற்றும் பிரபல கார்ட்டூனிஸ்ட் அரசு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் ஓவியக் கண்காட்சியை ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்