நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான கைவினை பயிற்சி வகுப்பு...
இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான கைவினை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது இப் பயிற்சியினை காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி துவங்கி வைத்தார். இன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பனை ஓலை கொண்டு அழகிய கைவினை பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சியினை தேவர்குளம் பகுதியினை சார்ந்த அந்தோணியம்மாள் நடத்தினார் இப் பயிற்சியினை தேவர்குளம் பகுதியினை சார்ந்த ஜோதி ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


