top of page

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு திறன் வளர்ப்பு பயிற்சி 

இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சுத்தமல்லி அரசு மேல் நிலை பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். அவர்களுக்கு அவர்களது நினைவுத்திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை 6 வயது மாணவர் அர்ஜுன் வழங்கினார் .இவர் வில்வித்தையில் சிறந்தவர். சாக்பீஸ் கொண்டு அழகிய சிற்பங்கள் செதுக்கும் வல்லுநர் .சிறந்த ஓவியர். சிலம்பம் கைதேர்ந்தவர் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய கொடிகளை அடையாளம் காட்டும் திறமை உடையவர். பிரைன்விட்டா மற்றும் ரூபி க்யூப்ஸ் ஆகியவற்றை ஒரு நிமிடத்திற்குள் முடிக்கும் திறன் வாய்ந்தவர். இதுபோன்ற அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கற்றுக் கொள்வதன் மூலமாக மாணவ மாணவிகள் படிப்பு திறனை வளர்த்துக்கொள்ளலாம் அதனைத்தொடர்ந்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை பொதிகை தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். காப்பாட்சியர் முன்னிலையில் ஆசிரியர்கள் ஓவிய ஆசிரியர் பால்வண்ணன் உடற்கல்வி ஆசிரியர் சுவாமிநாதன் ஆசிரியைகள் கமலம் பேபி லட்சுமி அகிலா சங்கர வடிவு ராணி மற்றும் மாணவர்கள் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தனர்.

38 views0 comments
bottom of page