நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்துஎஸ்.டி.பி.ஐ கட்சி் செயல் வீரர்கள் கூட்டம்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ருபிமனோகரன் அவர்களை ஆதரித்து எஸ்.டி.பி.ஐ நாங்குநேரி தொகுதி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் நெல்லை ஏர்வாடியில் நடைபெற்றது இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தலைவர் இம்ரான் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முல்லை மஜீத் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி துவக்க உரை நிகழ்த்தினார். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அஹமது நவவி அவர்கள் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரனை வெற்றி பெற வைப்பதற்கான செயல்திட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு ஆலோசகர் அமீர்கான், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா திமுக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் சித்திக், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ரீமா பைசல், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா, உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்.இதில் NWF மாவட்ட தலைவர் ஜன்னத் ஆலிமா, மருத்துவ சேவை அணி தலைவர் பேட்டை ஜெயலாணி, செயலாளர் பர்கிட் சேக், எஸ்.டி.டி.யூ மாவட்ட செயலாளர் பசீர்லால், செயற்குழு உறுப்பினர்கள் பாளை ஜிந்தா , ஏர்வாடி சேக்,மகளிர் அணி மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா, நெல்லை தொகுதி தலைவர் காசிம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் நன்றியுரை கூறினார்.