நவம்பர் 1ம் தேதி காவல்கிணறு ரயில் நிலையம் திறப்பு - திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில் நிலையம் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட உள்ளதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு மூடப்பட்ட காவல்கிணறு ரயில் நிலையம், பொதுமக்கள் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் நிலைய திறப்பு விழா, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.