top of page

நள்ளிரவில் புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்து கொலை காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் முனீஸ்வரன் இவர் ஜேசிபி ஆப்பரேட்டர் ஆக உள்ளார் இவருக்கு நாளை தென்மலையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு தேவையான பணிகளை மேற்கொண்டு இருந்தனர். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் நள்ளிரவு வரை ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அம்மா சகோதரி மற்றும் முனீஸ்வரன் ஆகிய மூவரும் ஒரே அறையில் தூங்க சென்றனர். அதன் பின்பு இரவு 2 மணி அளவில் சத்தம் கேட்டு முனிஸ்வரன் அம்மா வெளியே வந்த பார்த்த பொழுது கழுத்தை அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டு வாசலிலேயே ரத்த வெள்ளத்தில் முனிஸ்வரன் உயிர் பிரிந்தது. தகவலறிந்த சிவகிரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் போலிசார் நடத்திய விசாரணையில் முனிஸ்வரன் மைத்துனர் சங்கிலி முருகன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

7 views0 comments
bottom of page