திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய அளவிலான விருது
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்க்கும் ,மாவட்ட தேசிய தகவலியல் தொழில்நுட்பத்துறைக்கு மின்னணு மாற்றம் மாநாடு 2019 என்ற விருது( டிஜிட்டல் ட்ரான்ஃபர்மேசன் விருது-2019 ( Digital transformation Award-2019) கவர்னனஸ் நவ் (goverance - now)என்ற தேசிய குழு மூலம் புது டில்லியில் இன்று வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது அரசு துறையில் மின்னணு மாற்றம் என்ற அடிப்படையில் (GIS based poll monitoring system) கடந்த 2019 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 2979 வாக்குச்சாவடி மைய்யங்களிலும் புவி சார் அமைப்பு மூலமாக கண்காணித்து சிறப்பான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக மாவட்ட அளவிலான மின்னணு மாற்றம் விருது தேசிய அளவில் வழங்கப்பட்டுள்ளது . இதில் மொத்தம் 30 விருதுகள் இதில் மாவட்ட அளவில் 5 விருதுகளில் திருநெல்வேலி மாவட்டம் ஒன்று இந்த விருதினை கவர்னனஸ் நவ் என்ற குழு மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப அவர்களிடம் இன்று 6-11-19 வழங்கினார்கள். அருகில் தேசிய தகவழியியல் அலுவலர் தேவராஜ் ,உதவி அலுவலர் ஆறுமுக நாயனார் ஆகியோர் உள்ளனர் -