திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தில் இளைஞர்களைக்காக தனியார் வேலைவாய்ப்பு முகாம்...

அன்புள்ள தமிழ் மக்களுக்கு , நெல்லையில் தனியார் துறை வேலை வேண்டுமா? திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தில் இளைஞர்களைக்காக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (26-02-2020) காலை 9 மணி முதல் 2 மணி வரை பாளை தூய யோவான் கலை அறிவியல் கல்லூரியில் நடை பெற உள்ளது. இம்முகாமில் தகவல் தொழில்நுட்பம், சில்லறை வர்த்தகம் , சேவைத்துறை , ஜவுளித்துறை சார்ந்த 75 நிறுவனங்கள் பங்கு கொள்ளவுள்ளனர். இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுகழகம் (TNSDC), வெளிநாட்டு வேலைகளுக்கான நிறும்ம் (OMCL) தேசிய வேலைவாய்ப்பு முகமை (NCS )ஆகியவற்றில் பதிவுகள் மேற்கொள்ளலாம். மேலும் முன்னோடி வங்கி (Lead Bank) மூலம் சுயதொழில் செய்ய கடன் உதவி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் கல்விச்சான்று மற்றும் தேவையான சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். நடைபெறவுள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறேன் . “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்.