top of page

திருநெல்வேலி திருநங்கையர் வாழ்வில் திருப்பம் ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம் .





சமுதாயத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக உள்ள திருநங்கையர் சமூகம் போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் பல்வேறு தவறான வழியில் செல்ல கூடிய சூழல் நிலவி வந்தது.


சில மாதங்களுக்கு முன்பு “திருநங்கையர் வாழ்வும் வளமும் “ என்ற தலைப்பில் சரணாலயம் அமைப்பின் மூலமாக ஒரு கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். அக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி திருநங்கையருக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் Skill development Training மற்றும் தொழில் மேற்கொள்ள கடனுதவி பெறும் வகையில் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோனி மூலமாக 25 திருநங்கையருக்கு தையல் பயிற்சி துவக்கப்பட்டது .


ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் மூலமாக 2 தையல் மிசின் பெற்ற திருநங்கையர் நல்ல முறையில் தொழில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விழா ஏற்பாடுகளை சமூகநீதி மற்றம் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையர் சேகர், உதவி திட்ட அலுவலர்கள் ராமன் , முருகன் , வெள்ள பாண்டி மற்றும் சமூக ஆர்வலர் சுந்தர அக்னி ஆகியோர் செய்திருந்தனர்.


“இருட்டை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது நல்லது”


நன்றி- அன்னை தெரசா அறக்கட்டளை & சரணாலயம் தொண்டு நிறுவனம்.


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

4 views0 comments
bottom of page