திருநெல்வேலி உடையார்பட்டி Presentation Convent பள்ளியின் ஆண்டு விழா


திருநெல்வேலி உடையார்பட்டி Presentation Convent பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினேன். எனது உரையின் முக்கிய அம்சம் :- 🎯 குழந்தைகளின் ஆண்டு விழாவில் பங்கேற்க தனது வேலைகளை ஒதுக்கி வைத்து கலந்து கொண்டுள்ள பெற்றோர்களுக்கு பாராட்டுகள் . 🎯உங்களது ஊக்கமூட்டும் வார்த்தைக்காகவே உங்கள குழந்தைகள் காத்துக். கொண்டிருக்கிறார்கள் . 🎯திறமை இல்லாத குழந்தை என்று யாருமே இல்லை. திறமையை கண்டறியாத குழந்தைகள் வேண்டுமானால் உண்டு . 🎯பெற்றோர்கள் அவர்களது முதல் ஹீரோ . அவர்களுக்கு நல்ல முன் மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும் . 🎯குழந்தைகள் அறிவுரை கூறினால் செய்ய மாட்டார்கள். நீங்கள் பின்பற்றினால் உங்களை பின்பற்றுவார்கள். 🎯சாலை விதிகளை மதித்து நடந்து முன்மாதிரியாக விளங்க வேண்டுகிறேன் “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்