திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் திருநெல்வேலி மாவட்டம் கீழ் இயங்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் துவங்கி வைத்தார் .அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முன்னிலை வகித்தார் .தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சந்திரகுமார் மற்றும் திட்ட மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . 14 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 135 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இவர்களுக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் மற்றும் இதர பணியாளர்கள் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி சொல்லிக் கொடுத்து போட்டிகள் நடத்தினர்.அதில் பரமபதம், தாயம், பல்லாங்குழி நொண்டி, கோலி, பம்பரம் விடுதல் போன்ற ஏராளமான விளையாட்டுக்கள் கற்பிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் துவக்கமாக அருங்காட்சியகத்தின் பணிகள் குறித்த வில்லிசை பாடல் பாடப்பட்டது .அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீதி கதைகளை போதித்தார்.