top of page

திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு ஒலிப்பதிவு*

தேசிய காசநோயகற்றும் திட்டம், தூத்துக்குடி மாவட்டம்,வல்லநாடு காசநோய் பிரிவின்* சார்பாக *05.03.2020 (வியாழக்கிழமை)* அன்று முற்பகல் 10 மணியளவில் பாளையங்கோட்டை, *அகில இந்திய வானொலி 📻 நிலையத்தில்* வைத்து காசநோய் விழிப்புணர்வு ஒலிப்பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட *துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம்* M.B.B.S., DTCD., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காசநோய் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை அகில இந்திய வானொலி நிலைய *மூத்த அறிவிப்பாளர் முனைவர்.A.சந்திரபுஷ்பம்* அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். *அமைப்பு உதவியாளர் திருமதி.இசக்கியம்மாள்* அவர்கள் ஒலிப்பதிவு செய்தார்கள். *மாவட்ட தீர்வுமுறை அமைப்பாளர் திரு.குப்புசாமி, திரு.செல்லப்பா* உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை *வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்ப்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார். விரைவில் இந்நிகழ்ச்சி தமிழகமெங்கும் ஆல் இண்டியா ரேடியோ 1197 என்ற அலைவரிசையில் *சுவாசநலம்* என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும்...

18 views0 comments
bottom of page