top of page

தாமரை பிரதர்ஸ் மீடியாசார்பில், ‛வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தக வெளியீடு

அன்புள்ள தமிழ் மக்களுக்கு , திருநெல்வேலி புத்தக திருவிழாவில் (09-02-2020) மாலை பேராசிரியர் சௌந்திர மகாதேவன் எழுதி தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்ட, ‛வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகத்தை, நான் வெளியிட, சதக்கத்துல்லா அப்பா கல்லுாரி முதல்வர் முகமது சாதிக் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் தினமலர் மதுரை பதிப்பு செய்தி ஆசிரியர் திரு ஜி.வி.ரமேஷ்குமார், எழுத்தாளர்கள் திரு.செ.திவான், திரு.வண்ணதாசன், பேரா. மேலும் சிவசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர் . எனது உரையின் முக்கிய அம்சம்:- 🎯 திருக்குறள் மனித வாழ்வை வழிநடத்தும் தேவநூல். தமிழர்களின் அரிய பொக்கிஷம். 🎯ஒரு மனிதன் தன் வாழ்வில் ஏதேனும் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே படிக்க இயலும் என்றால் அவன் படிக்க வேண்டிய புத்தகம் திருக்குறள் மட்டுமே. 🎯 எல்லாப் பொருளும் இதன்பால் உள இல்லா பொருள் எதனிலும் இல. என்றார் மதுரை தமிழ்நாகனார். அது முற்றிலும் உண்மை. 🎯திருக்குறளை மிக எளிதாக வாழ்வியல் கோட்பாடுகளுடன் இணைத்து நம்பிக்கை வளர்க்கும் வகையில் எழுதியுள்ள பேராசிரியருக்கு மிக்க நன்றி. 🎯 பேராசிரியரின் பயணக்கட்டுரைகளை வாசித்துள்ளேன். அவர் அதனை தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொண்டார் கொள்கிறேன் . #அன்பைவிதைப்போம் #Nellaibookfair #Tirunelveli என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்

9 views0 comments
bottom of page