தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் காசநோயாளிக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட *எஸ்.டி.பி.ஐ. கட்சி* மற்றும் *தேசிய காசநோயகற்றும் திட்டம் - மாநகராட்சி *காசநோய் பிரிவு* இணைந்து நடத்திய காசநோயாளிக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி *14.01.2020 செவ்வாய்கிழமை* அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட காசநோய் மையத்தில் வைத்து *துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.மதியழகன்* வரவேற்று பேசினார். மாவட்ட நலக் கல்வியாளர் *திரு.மா.தங்கவேல்* அவர்கள் முன்னிலை வகித்தார்கள். *துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம்* அவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வழங்கப்பட்ட 25 கிலோ அரிசி மூடை, எண்ணெய், பருப்பு மற்றும் இரண்டு மாதத்திற்கு சமயலுக்கு தேவையான பலசரக்கு பொருட்களை எந்த ஒரு வருமானமும் இல்லாமல், வயதான தாயுடன் வசித்து வரும் காசநோயாளிக்கு வழங்கினார்கள். இறுதியாக தீர்வு முறை அமைப்பாளர் *திரு.குப்புசாமி* அவர்கள் நன்றி கூறினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் *திரு.சந்தான சங்கர்வேல்*, அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் *திரு.மோகன்*, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் *திரு.காதர் முகைதீன்*, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் *அஜிஸ்*, PFI மாவட்ட செயலாளர் திரு.சம்சு மரைக்காயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை *மாநகராட்சி காசநோய் பிரிவு* மற்றும் *எஸ்.டி.பி.ஐ கட்சி* இணைந்து செய்திருந்தது.

