top of page

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி...

*தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய 2019-2020ம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அமைச்சுப்பணியாளர்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.* *❇தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வணிகவரித்துறை, வருவாய்த்துறை, நீதித்துரை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வரும் அரசுப்பணியாளர்களுக்கிடையே 2019-2020ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 06.03.2020 அன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப்போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.* *❇இந்த விளையாட்டுப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்;திலும், உயரம் தாண்டுதல், ஒற்றையர் மற்றும் இரட்டையர் மேஜை பந்துப் போட்டி ஆகிய 4 விளையாட்டுக்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். கபடி போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.* *❇400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் காவல்துறை அமைச்சுப்பபணியாளர்கள் திரு. மயில்குமார், சேர்மத்துரை, கதிரேசன் மற்றும் பெரியசாமி ராஜா ஆகியோரும், உயரம் தாண்டுதலில் செந்தில் விநாயகப்பெருமாளும், ஒற்றையர் மேஜை பந்துப் போட்டியில் குமார், இரட்டையர் மேஜை பந்துப் போட்டியில் குமார் மற்றும் ஆவுடையப்பன், கபாடி போட்டியில் கணேசபெருமாள், மேண்ட்லி, பாலகிருஷ்ணன், முனியசாமி, கோபிநாத், ராமஜெயம், ராஜபெருமாள், ராஜ்குமார் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.* *❇வெற்றி பெற்றவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.*

3 views0 comments
bottom of page