top of page

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் போர்க்கப்பலை  பள்ளி மாணவ, மாணவியர்கள் 14ம் தேதி பார்வையிடலாம்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தரும் போர்க்கப்பலை 14ம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்கள் 15ம் தேதி பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்படை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தைக் கொண்டாடும் வகையில் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் கடற்படை போர்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது. இக்கப்பலை டிசம்பர்14-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் மதியம் 1.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் பார்வையிடலாம். 15-ஆம் தேதி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வ.உ.சி. துறைமுகத்தில் இந்திய கடற்படையின் போர்க் கப்பலை பார்வையிட அனுமதிக்கப்படும். போர்க் கப்பலை பார்வையிட வரும் பள்ளி மாணவ, மணவிகளும், பொதுமக்களும் கடற்படை அதிகாரிகளிடம் கடற்படையின் வாழ்க்கையைப் பற்றி கலந்துறையாடி அறிந்துகொள்ளலாம். கப்பலை பார்வையிட வருபவர்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் பிரதான வாசல் வழியாக அனுமதி தரப்படும். பள்ளி மாணவர்கள் பள்ளிச்சீருடைகளில், ஆசிரியர்களுடன் மற்றும் பள்ளி முதல்வர் முத்திரையிட்ட மாணவர்கள் பெயர் அடங்கிய பட்டியலோடு வரவேண்டும். பொதுமக்கள் மற்றும் உயர்கல்வி பயில்பவர்களும் ஆதார்அட்டையுடன் கண்டிப்பாக வரவேண்டும். கைபேசி, பை, புகைப்படக்கருவி ஆகியவைகளை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பார்வையாளர்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இது ஒரு அறிய வாய்ப்பு இதனை தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7356218196 என்ற அலைபேசி எண்ணிற்கு அல்லது enccomcentvlnavy@nic.in என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும் என கடற்படை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 views0 comments
bottom of page