தொடரும் சதுரங்க வேட்டை மோசடிகள் - கவனம் தேவை


பிரபல வங்கி கிளையிலிருந்து பேசுவதாக கூறி, ATM கார்டு பிளாக் செய்யப்படாமல் இருக்க கார்டு நம்பர் , சிவிவி நம்பர் கேட்பது போன்றவை குறித்து மக்கள் ஓரளவு விழிப்புணர்வு பெற்றுள்ளதால் அந்தமோசடி கும்பல் தற்போது புதிய முறையை கையாள தொடங்கியுள்ளனர். இதில் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு பரிசு ரூ 12,80,000/-( பன்னிரெண்டு லட்சத்து எண்பதாயிரம் மட்டுமே 😂😂) விழுந்துள்ளதாக கூறி அதை அனுப்ப வங்கி கட்டணமாக அதில் 1 சதமான 12,800 மட்டும் அனுப்ப கோருகின்றனர் . நம்பிக்கை ஏற்படுத்த இரண்டு போட்டோ, ஆதார் கார்டு, பான் கார்டு , பாஸ் புக் ஜெராக்ஸ் போன்றவையும் கேட்கின்றனர் . பணம் வேண்டாம் மகேந்திரா காராக விரும்பினால் டிரைவிங் லைசன்ஸ் காப்பி கேட்கின்றனர். சமீபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரிடம் நடைபெற்ற மோசடி முயற்சியின் காரணமாகவே இந்த விழிப்புணர்வு பதிவு. பணம் அனுப்பினால் இரட்டை லாபம். ஆவணங்கள் மட்டும் அனுப்பினால் போலி சிம் கார்டு வாங்க பயன்படும். “கவனமாக இருப்போம் மோசடியில் இருந்து தப்பிப்போம்” “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்