“தனிமைப்படுத்தப்பட்ட வீடு“என்ற ஸடிக்கர் ஒட்டிய வீடுகளில் உள்ளவர்கள் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்.
அன்பு தமிழ் மக்களே,

“தனிமைப்படுத்தப்பட்ட வீடு “ என்ற ஸடிக்கர் ஒட்டிய வீடுகளில் இருப்பவர்கள் கடந்த மார்ச் 1க்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் . நமது நலனுக்காக அவர்களை வீட்டிற்குள்ளாக தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே. அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் நம் சகோதரர்கள். இக்கட்டான சூழலில் துணை நிற்பது நம் கடமை.
இது போலவே வெளிநாட்டு வாழ் தமிழர்களும் இக்கட்டான சூழ்நிலையில் அங்கு உள்ளனர். அவர்கள் குடும்பத்தாருக்கும் ஆதரவாக இருக்க வேண்டியது நம் கடமை. நம் அனைவரையும் நம்பியே அவரது குடும்பத்தை இங்கு விட்டு அவர்கள் வெளிநாடு சென்றார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவலர் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்