டெங்கு நோய் தடுப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்
*திருநெல்வேலி மாவட்டம்* 11.10.2019 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி இன்று திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக *திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு மரிய கிளாஸ்டன்ஜோஸ்* அவர்களின் முன்னிலையில் *திருநெல்வேலி மாவட்ட சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர் திரு மதன்* அவர்கள் கலந்துகொண்டு *டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நாம் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை காவலர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் வீட்டை சுற்றி நீர் தேங்காமல் இருக்க வேண்டும் எனவும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். அதன்பின் காவலர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு நீர் கசாயம் கொடுக்கப்பட்டது. *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.*
