சாலை விபத்துகள் தொடர்பாக விழிப்பணர்வு ஏற்படுத்துவதில் சட்டப் கல்லூரி மாணவர்களின் பங்கு என்ன ?


திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விபத்தில். சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி? விபத்துகளை தவிர்ப்பது எப்படி? சாலை விபத்துகள் தொடர்பாக விழிப்பணர்வு ஏற்படுத்துவதில் சட்டப் கல்லூரி மாணவர்களின் பங்கு என்ன ? என்ற தலைப்பில் உரையாற்றினேன். எனது உரையின் முக்கிய அம்சம் :- 🎯 இந்திய அளவில் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் வகிப்பது வேதனைக்குரியது. 🎯 சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மற்றவர்களை விட சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு அதிகம் உள்ளது. 🎯 விபத்துக்களில் சிக்குவோருக்கு GOLDEN HOURஎன்று சொல்லக்கூடிய 30 நிமிடங்களில் முதலுதவி செய்யும் போது அவர்கள் பிழைப்பதற்கு வாய்ப்பு அதிகம். 🎯விபத்துக்களில் சிக்குவோருக்கு உதவுவதால் எந்த பிரட்சினையும் இல்லை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . 🎯நீங்கள் விபத்துக்களில் சிக்குவோருக்கு முதலுதவி செய்ய தயங்க கூடாது . 🎯 சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி தலைக்கவசம் மற்றம் சீட் பெல்ட் அணிந்து விலைமதிப்புபில்லாத உயிரைக் காக்க வேண்டும். முதலுதவி குறித்து வகுப்பெடுத்த டாக்டர் வெங்கடேஷ் மற்றும் கல்லூரி முதல்வர் லதா ஆகியோருக்கு மிக்க நன்றி. “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம் .