top of page

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்...

இன்று 26-02-2020 கங்கை கொண்டான் ATG டயர் தொழிற்சாலையில் ஆலை தலைவர் திரு. பி.என். ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் " தொழிற்சாலை வளாகத்தில் நடத்தப் பட்டது. அதில் அக்கம் பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ATG தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆலையின் தலைவர் திரு. பி.என். ராஜேந்திரன், மனிதவளத்துறை துணை பொது மேலாளர், திரு. ஜே . தாமோதரன் ஆகியோரை தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு அவர்கள் சிறப்புரையாற்றினார் . பாதுகாப்பு துறை பொது மேலாளர், திரு. ஆர். சண்முகநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினார். அதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை - சிப்காட் விலக்கில் பணி முடிந்து செல்லும் ATG தொழிலாளர்கள் மற்றும் அனைத்து சாலைப்பயணிகளுக்கும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்குதல், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல் ஆகிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊட்டும் பணிகள் நடந்தன . அதில் கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திருமதி. ஜென்ஸி, வள்ளியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பிரபு , ATG மேலாளர்கள் திரு. ஜானகிராம், திரு. முருகேசன் மற்றும் ATG CSO , திரு. ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 view0 comments
bottom of page