சிறுமிக்கு பாலியல் தொந்தரவு5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது .

திருநெல்வேலி மாநகரம் டவுன் மகளிர் காவல் நிலையம் தெற்கு ரத வீதியில் 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முருகன் (வயது 68) என்ற நபர் கைது செய்யப்பட்டு 11 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொண்டு 9 மாத காலத்தில் திருநெல்வேலி மகிளா நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது . இந்த வழக்கில் புகாரதார்ரின் வீட்டின் முன் பகுதியில் பொருத்தப் பட்டிருந்த CCTV கேமரா முக்கிய சாட்சியாக விளங்கியது . CCTV கேமிராக்கள் குற்றம் நடப்பதை தடுப்பதுடன் ஒரு 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்கவும் பயன்பட்டுள்ளன . குற்றங்களை குறைக்கவும் , நடந்த குற்றங்களுக்கு தண்டனை பெற்று தரவும் CCTV உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்க தக்கது . இந்த வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்து 11 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 5 ஆண்டு தண்டனை வாங்கிக் கொடுத்த ஆய்வாளர் வேல்கனி மற்றம் அவருக்கு உறுதுணையாக இருந்த காவலர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தேன் . பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தரும் திருநெல்வேலி மாநகர காவல் துறையின் பணி தொடரும் . ..... “ நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவலர் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்.