சைபர் குற்றங்கள் தொடர்பான சட்ட விழிப்புணர்வு “ முகாம்


திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற “ சைபர் குற்றங்கள் தொடர்பான சட்ட விழிப்புணர்வு “ முகாமில் கலந்து கொண்டு உரையாற்றினேன் . இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது, உரிமையியல் நீதிபதி வஷீத்குமார், வழக்கறிஞர் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன் , கல்லூரி முதல்வர் மைதிலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . எனது உரையின் முக்கிய அம்சம்:- 🎯 நம்முடைய நாட்கள் செல்போனில் விழித்து செல்போன் பார்த்த பின் தூங்குவதில் முடிகிறது. 🎯 தகவல் தொழில்நுட்ப காலத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதால் மட்டுமே சைபர் குற்றங்களில் இருந்து தப்ப முடியும் . 🎯சைபர் குற்றங்களுக்கு எல்லை ஏதும் கிடையாது . உலகின்எந்த மூலையில் இருந்தும் நம்மை பாதிக்க முடியும் . 🎯 தொடர்பற்ற அழைப்புகள் , எஸ்எம்எஸ், ஈமெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம். 🎯சமூக ஊடகங்களை மிக கவனமாக கையாள வேண்டும். உங்களது அன்றாட வாழ்க்கையை அதில் பதிவேற்றுவது அவசியமல்ல என்பதை உணர் வேண்டும் . 🎯 வங்கி குற்றங்கள் , ATM குற்றங்கள் தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . 🎯சைபர் குற்றங்களுக்கு ஆளாக நேர்ந்தால் உடனடியாக 1091 என்ற பெண்களுக்கான அவசர உதவி எண்ணை அழைக்கவும். அருகிலுள்ள காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளவும். “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” #Cybersafety #Tirunelvelicity #Tnpolice என்றும் அன்புடன் ச. சரவணன் காவலர் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்