top of page

கோவில்பட்டி வட்டார நூலகத்தில் காசநோய் பற்றிய பேச்சுப்போட்டி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி...

உலக காசநோய் எதிர்ப்பு வார்த்தை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவு இனைந்து கோவில்பட்டி வட்டார நூலகத்தில் காசநோய் பற்றிய பேச்சுப்போட்டி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் முத்துமுருகன் வரவேற்று பேசினார் நிகழ்சிக்கு தலைமை வகித்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் பேசியதாவது காசநோயால் ஏற்படும் பாதிப்புகள் காசநோயை ஒழிப்பதன் அவசியம் பற்றியும் காசநோயாளிகளுக்கு அரசு வழங்கக்கூடிய நிவாரண தொகை பற்றி விரிவாக கூறினார் நிலைய மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி பேசுகையில் காசநோயாளிகள் தினமும் உணவில் எடுத்துகொள்ள வேண்டிய உணவு முறைகள் பற்றியும் "சிபினாட்" ஆய்வகம் மூலமாக காசநோய் கண்டறியும் முறை பற்றி பேசினார். நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் சீனிவாசன் காசநோய் அறிகுறிகள் மற்றும் பரவும் தன்மை பற்றி எடுத்துக்கூறினார் மேலும் நிகழ்சியில் காசநோய் பற்றிய பேச்சுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் (பரமேஸ்வரன்) கோவில்பட்டி முன்னாள் துணை ஆளுநர் (சீனிவாசன்) ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் (முத்து செல்வன்) நூலக வாசகர் வட்ட தலைவர் (ராச மாணிக்கம்) நூலக புரவலர் (வினோபா) ரோட்டரி சங்க உறுப்பினர் (சுப்பிரமணியன் ) காசநோய் சுகாதார பார்வையாளர்கள் மகேஸ், சகாயராணி மற்றும் நூலகபுரவலர்கள் பலர் கலந்து கொண்டனர் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்

13 views0 comments
bottom of page