*கோவில்பட்டி நகர்ப்புற பகுதியில் வீடு வீடாக சென்று காசநோய் கண்டறியும் முகாம்*
திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் கடம்பூர் காசநோய் அலகின் சார்பாக *துணை இயக்குநர் மருத்துவ பணிகள் சுந்தரலிங்கம்* அவர்களின் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி நகர்ப்புற பகுதியான ஸ்டாலின் காலனி மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்றது. காசநோய் கண்டறியும் நிகழ்ச்சியினை கீழ ஈரால் மருத்துவ அலுவலர் இந்திரா தேவி அவர்கள் துவக்கி வைத்து பேசுகையில்"காசநோயாளிள் வீட்டில் உள்ள நபர்கள் அனைவரும் காசநோய் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். பின்னர் காசநோய் பணியாளர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவிகள் ஆகியோர் வீடு வீடாக சென்று காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்று கேட்டறிந்தனர். மேலும் காசநோய் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு சளி பரிசோதனையானது கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் *சிபினாட்* எனும் முறையில் பரிசோதனை செய்பட்டது சளி பரிசோதனை செய்யப்பட்ட நபர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனைக்கு அறிவுறுத்தப்பட்டது இந்த முகாமில் கீழஈரால் நடமாடும் மருத்துவ அலுவலர் *ஆனந்த்* மற்றும் தனியார் மருத்துவ மாணவிகள், மேலும் காசநோய் சுகாதார பார்வையாளர்கள் மகேஷ்,சகாயராணி,திவ்யா மற்றும் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன் ,காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியினை கடம்பூர் காசநோய் அலகின் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் *காசி விஸ்வநாதன்* ஏற்பாடு செய்திருந்தார்



