கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் கடம்பூர் காச நோய் அலகு சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட கோவில்பட்டி அரசு மருத்துமனை நிலைய மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி ஒவ்வொரு நபர்களிடமும் சிகிச்சையின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார் காசநோயாளிகளின் வீட்டில் உள்ள ஆறு வயதுக்குட்பட்ட குழைந்தைகள் அனைவரும் காசநோய் கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார் . காசநோயாளிகள் தினமும் உணவில் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் பற்றி எடுத்துக்கூறினார் மேலும் முகாமில் நெஞ்சக நோய் மருத்துவர் சீனிவாசன் காசநோய் பரவும் தன்மை பற்றி பேசினார் சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார். காசநோயாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் மூலமாக அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை பற்றி பேசினார் இம் முகாமில் காசநோயாளிகள் மற்றும் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் காசநோய் சுகாதார பார்வையாளர் சகாயராணி சிபினாட் ஆய்வக நுட்பனர் ராமலட்சுமி, ராஜகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்